கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்த ராமையாவும், துணை முதல்வராக டி.கே சிவக்குமாரும் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகா சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு போட்டியிட காங்கிரஸ் கட்சியின் யு.டி. காதர் தற்போது வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் 5 முறை எம்எல்ஏவாக இருந்த யுடி காதர் சட்டப்பேரவையின் இளம் சபாநாயகராக பொறுப்பேற்க இருக்கிறார்.