
கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவடைந்த பிறகு மே 13-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகிறது. தற்போது கர்நாடகாவில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதனால் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜகவின் தேசிய தலைவர்கள் பலர் கர்நாடகாவுக்கு சென்று தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகள் பிரதானமாக போட்டியிடும். இந்நிலையில் தற்போது பாஜக கட்சி கர்நாடக மாநிலத்தில் 189 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை முதல் கட்டமாக வெளியிட்டுள்ளது. தற்போது முதல்வராக இருக்கும் பசுவராஜ் பொம்மை மீண்டும் ஷிகோவன் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 133 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியை ஆட்சி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
The Central Election Committee of the BJP has decided the names of 189 candidates, in the first list, for the ensuing general elections to the legislative assembly of Karnataka. (2/2) pic.twitter.com/tDaGEzcWuy
— BJP (@BJP4India) April 11, 2023