மத்தியபிரதேசம் இந்தூரை சேர்ந்தவர் தனிஷ்கா சுஜித்(15). இவர் கடந்த 2020 ஆம் வருடம் கொரோனா பெருந்தொற்றில் தன் தந்தையையும், தாத்தாவையும் இழந்துவிட்டார். இதனிடையே படிப்பில் ஆர்வமுள்ள தனிஷ்கா, தனது சொந்த வாழ்வில் ஏற்பட்ட இழப்புகளையும் தாண்டி வாழ்க்கையில் சாதித்தாக வேண்டும் என நினைத்தார்.

அதன்படி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், 13 வயதிலேயே 12-ம் வகுப்புத் தேர்வை நேரடியாக எழுதி தேர்ச்சி பெற்றார். இந்தூர் தேவி அகில்யா பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வில் தனிஷ்கா நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறப்பு நேர்வாக பிஏ உளவியல் படிப்பு படிக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது தனிஷ்கா பிஏ இறுதி ஆண்டு தேர்வை 19-ஆம் தேதி முதல் எழுத உள்ளார். இதற்கிடையில் கடந்த 1-ஆம் மாநிலத்தின் தலைநகரான போபாலுக்கு பிரதமர் மோடி வந்தபோது அவரை தனிஷ்கா சுஜித் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.