கர்நாடகாவில் வரும் 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். கர்நாடகா சட்டசபை தேர்தலில் 128 முதல் 131 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்று லோக்பால் சர்வே கூறியது, பாஜகவினருக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரம் கருத்துக் கணிப்புகள் செல்லாது எனவும் கர்நாடகாவில் பாஜகவே ஆட்சியமைக்கும் எனவும் அமித்ஷா நம்பிக்கை தெரிவிக்கிறார். இன்னும் சில தினங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகாவில் மும்முனை போட்டி நிலவுகிறது.

இதனால் வெல்வது யார்? பசவராஜ் பொம்மை, எச்.டி.குமாரசாமி, டி.கே.சிவக்குமார்? பா.ஜ.க தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சர்கள், மூத்தத்தலைவர்கள் என பிரச்சாரம் பலமாக உள்ளது. கர்நாடகா தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களிலிருந்து ஹெச்.டி.குமாரசாமியின் புகைப்படத்தை காலபைரவர் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.