கடன் பெற மிகவும் முக்கியமான ஒன்றுதான் கிரெடிட் ஸ்கோர். கடனைத் திருப்பி செலுத்தும் திறன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் மிகப் பெரிய காரணி என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். கடன் தவணைத்தொகையை நீங்கள் தாமதமாக (அ) சரியாக செலுத்தாமல் இருந்து வந்தால் அது உங்களது கிரெடிட் ஸ்கோரில் மிகப் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏதேனும் சில காரணங்களால் உங்களது கிரெடிட் ஸ்கோர் குறைந்தால், அதை பழைய நிலைக்கு கொண்டு வர குறைந்தது 4-6 மாதங்கள் வரை ஆகலாம். 300 -900 வரை சிபில் ஸ்கோர் மதிப்பெண்கள் இருக்கிறது. இதில் அதிக மதிப்பெண்கள் இருப்பின் உங்களுக்கு கடன் வழங்குபவர்கள் எளிதில் கடன் வழங்கிவிடுவார். அதே நேரம் குறைந்த மதிப்பெண் வைத்திருப்பவர்களுக்கு கடன் ஆபத்துகள் அதிகமாகும்.

750 (அ) அதற்கு மேல் வைத்து இருப்பது கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். ஏராளமான வங்கிகளானது 21 வயது (அ) அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் கடன் வழங்கும். கடன் பெறுவதற்குரிய அதிகபட்ச வயது 58 ஆகும். தனி நபர் கடனுக்கான தகுதியுடையவரா மற்றும் வட்டி விகிதம் என்ன என்பதை தீர்மானிக்கும் முன் எந்தவொரு கடன் வழங்கும் நிறுவனமும் உங்களது கிரெடிட் ஸ்கோரை சரிபார்க்கும். உயர்ந்த நிலையில் கிரெடிட் ஸ்கோர் வைத்து இருப்பது தனி நபர்கள் பணத்தைத் திருப்பி செலுத்தும் திறனை கடன் வழங்குபவர்களுக்கு உறுதிப்படுத்த உதவுகிறது.