உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு நாளைக்கு 115 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாவதாக அரசின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக ஒரு நாளுக்கு 2.5 கோடி முதல் 3 கோடி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியகியுள்ளது.
ஆனால் இதில், அதிகபட்சமாக நொய்டா, காஸியாபாத் (ரூ.13- 14 கோடி), ஆக்ரா (ரூ. 12- 13 கோடி), மீரட் (ரூ.10 கோடி), லக்னெள(ரூ. 10 – 12 கோடி), கான்பூர் (ரூ. 8- 10 கோடி), வாராணசி (ரூ. 6- 8 கோடி) ஆகிய பகுதிகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.