மத்திய-மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கு தேவையான அனைத்து வித வசதிகளையும் வழங்கி வருகிறது. அதன்படி புதுவையில் அரசு பெண் ஊழியர்கள் மாதத்தில் 3 வெள்ளிக்கிழமைகள் காலை நேரத்தில் 2 மணி நேரம் தாமதமாக வரலாம் என அறிவித்தது. அதேபோன்று தற்போது மற்றொரு மாநில அரசு புது அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அந்த வகையில் ஆட்டிஸ்டிக் கோளாறுகள், பெருமூளை வாதம், பல குறைபாடுகள் மற்றும் மனநலம் குன்றிய குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்கள் வேலை நேரத்தில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் மாதத்தில் அவர்களது பணி நேரத்தில் அதிகபட்சம் 16 மணி நேரம் தளர்வு எடுத்துக்கொள்ளலாம் என முதல்வர் அறிவித்து உள்ளார்.