2023-24 ஆம் நிதி ஆண்டில் பல நிதி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வரும் நிலையில், இப்போது காப்பீட்டு துறையிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது நடப்பு ஆண்டு முதல் அதிகமான பிரீமியத்துடன் பாலிசிகளில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள் அதிக வரிசெலுத்த வேண்டி இருக்கும். புது விதிகளின் வாயிலாக பாலிசிதாரர்கள் வருடந்தோறும் ரூ.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரீமியம் தொகைகளுக்கு வரி செலுத்தவேண்டும்.

மேலும் இந்த நிதி ஆண்டில் யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் பிளான்களுக்கு (யுலிப்கள்) புது வருமான வரி விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக வருடத்திற்கு ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான யூலிப் பிரீமியங்களில் வரி விலக்கு நன்மைகள் கிடைக்கப் பெறும். இன்சூரன்ஸ் ரெகுலேட்டரான ஐஆர்டிஏஐ, நிர்வாகச் செலவுகள் மற்றும் கமிஷன் வரம்பை மாற்றி ஒரேநாளில் நடைமுறைப்படுத்தி இருக்கிறது. ஐஆர்டிஏஐ தன் விதிகளை மாற்றும்போது காப்பீட்டு முகவர்கள்(அ)ஒருங்கிணைப்பாளர்களுக்குரிய கமிஷன் வரம்பை நீக்க முடிவுசெய்துள்ளது.