மும்பை லோக்கல் ரயில் ஒன்றில் இருக்கைக்காக ஆண் நபரிடம் பெண் ஒருவர் கடும்  வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் மும்பை உள்ளூர் ரயிலின் பெட்டியில் பயணிகள் நிறைந்திருப்பதை காண முடிகிறது. அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் தனக்கு முன் நிற்கும் ஆண் பயணியிடம் தகராறு செய்வதை வீடியோவில் காண முடிகிறது. முதலில் அந்த ஆண் நபரை  இருக்கையில் இருந்து எழுந்து நிற்க சொன்ன அப்பெண், பிறகு அவரிடம் சண்டையிட்டு ரயிலில் இருந்து வெளியே இறங்க சொல்கிறார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவெனில் இறுதிவரை அந்த பெண் அந்நபரை வம்பிழுத்துக் கொண்டே இருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Ghar ke kalesh (@gharkekaleshh)