நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி-1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கி உள்ளார். ரூபாய்.7 லட்சம் வரையுள்ள வருமானத்துக்கு வரி இல்லை என நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார். வருமான வரி விதிகளில் அரசு பெரிய மாற்றத்தினை செய்திருக்கிறது. புது வரி விதிப்பில் கவனம் செலுத்தி மத்திய அரசு பொதுமக்களுக்கு ரூ.7 லட்சம் வரை வரிவிலக்கு அளித்துள்ளது.

அதோடு பல வகையான வரிச்சலுகைகளும் கிடைக்கும். ஏப்ரல் 1, 2023 முதல் புது வரி விதிப்பு இயல்பு நிலை வரிவிதிப்பு முறையாக (டீஃபால்ட் டேக்ஸ் ரெஜிம்) மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. புது வருமான வரி ஸ்லாப்பில் வருடத்திற்கு ரூ.7 லட்சம் வரை வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. உங்களது ஆண்டு வருமானம் ரூ.7 லட்சமாக இருந்தால் தள்ளுபடியுடன் நீங்கள் எந்த வரியும் செலுத்தத் தேவையில்லை.