நிலுவையிலுள்ள DA நிலுவைத்தொகையை மத்திய அரசு விரைவில் வழங்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இத்தொகை ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நம்பப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் பம்பர் நன்மைகளை பெறுவர். மோடி அரசாங்கம் அண்மையில் அகவிலைப்படியை 4% அதிகரித்தது. இதையடுத்து அடிப்படை சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்கும் என்பது உறுதி.

இப்போது அரசு தரப்பில் நிலுவையிலுள்ள அகவிலைப்படி அரியர் தொகையை விரைவில் அளிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்து உள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசு அகவிலைப்படி நிலுவைத்தொகையை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் கணக்குகளில் செலுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது. ஜனவரி 2023 முதல் பிப்ரவரி வரை 2 மாதங்களுக்காக அகவிலைப்படி அரியர்தொகை ஊழியர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.