சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அந்த இளைஞர் திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு பாலத்தின் மேலே ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
