கர்நாடக மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் பிறகு 8 அமைச்சர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இன்று கர்நாடக மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும் பிற அமைச்சர்களும் பதவி ஏற்க இருக்கிறார்கள். இந்நிலையில் முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்போது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பெங்களூர் கிளம்பி சென்றுள்ளார்.