செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கிளாம்பாக்கத்தில் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்ட நெரிசல் பெரும் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிதாக புறநகர் ரயில்வே நிலையம் ஒன்றும் அருகில் ஆம்னி பேருந்து நிலையம் ஒன்றும் அமைக்கப்பட இருக்கிறது.

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் அண்மையில் கிளாம்பாக்கத்தில் ஆய்வு நடைபெற்றது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதியின் பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் திறப்பு விழா குறித்த முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் ஜூன் மாதத்தில் திறக்கப்பட இருக்கிறது. மேலும் இந்த தகவலை சமீபத்திய பேட்டியில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார் ‌