கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளை எண்ணும் பணியானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மொத்தம் உள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. இதனிடையே காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.

ஆளுங்கட்சியான பா.ஜ.க 71 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஷிகாவ்ன் தொகுதியில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றுள்ளார். அதாவது ஷிகாவ்ன் தொகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை 16 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், அதிக வாக்கு வித்தியாசத்தில் இருப்பதால் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.