அஜித்தின் 62 திரைப்படம் குறித்த செய்தி வைரலாகி வருகின்றது.

அஜித் நடிப்பில் தற்போது துணிவு திரைப்படம் வெளியாகி வசூலை அள்ளி வருகின்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித் தனது 62-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் படபிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தன.

இது குறித்த தகவல் வெளியாகாத நிலையில் படத்தின் இயக்குனர் மாறுபடலாம் எனவும் விக்னேஷ் சிவனுக்கு பதிலாக வேறு ஒரு இயக்குனர் நியமிக்கப்படலாம் எனவும் செய்தி வெளியாகியிருக்கின்றது. இதனால் தற்போது #JusticeforVigneshShivan என்ற ஹாஷ்டாக்-யை சிலர் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றார்கள். மேலும் அஜித்தின் திரைப்படத்திலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்படக்கூடாது எனவும் கூறி வருகின்றார்கள் குறிப்பிடத்தக்கது.