தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில் தற்போது நவீன இயந்திரங்கள் மூலம் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அடுத்த நான்கு மாதங்களில் திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ள முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் இனி எந்த ஒரு இறப்பும் கழிவுநீர் சுத்திகரிப்பால் நேரிடக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.