தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும், 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வழக்கத்தை விட கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள்  திறப்பதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். அதாவது திட்டமிட்டபடி 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5-ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.