Jio-வின் போஸ்ட் பெய்ட் ரீசார்ஜ் பிளானில் ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைக்காத பல நன்மைகளை வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். நீங்கள் ஒரு புது போஸ்ட்பெய்ட் திட்டத்தினை வாங்க விரும்பினால், இன்று நாங்கள் உங்களுக்கு jio-வின் திட்டம் பற்றி தெரிவிக்க இருக்கிறோம். அந்த ரீசார்ஜ் பிளானின் விலையானது ரூ.399 ஆகும்.

இதில் நீங்கள் சாதாரண பலன்களை பெறலாம். மேலும் நிறுவனமானது உங்களது பொழுதுபோக்கையும் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் சேர்த்து உள்ளது. இத்திட்டத்தில் முதலில் 1 மாத வேலிடிட்டி கிடைக்கும். அத்துடன் தினசரி 100 sms கிடைக்கும். இந்த பிளானில் உங்களுக்கு 75gp டேட்டாவானது வழங்கப்படுகிறது. அதனை நீங்கள் மாதம் முழுவதும் பயன்படுத்தலாம்.

இந்த டேட்டா தீர்ந்தபின் பயனர்கள் ஒரு ஜிபிக்கு ரூபாய்.10 அதிகமாக செலுத்தவேண்டும். இத்திட்டதில் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் ஓடிடி நன்மைகள் கிடைக்குமாம். இத்திட்டத்தில் Netflix, Amazon Prime வீடியோ, Disney+ Hotstar ஆகியவற்றுக்கான இலவச அணுகல் கிடைக்கிறது.