
நாடு முழுவதும் ஜேஇஇ முதன்மை தேர்வில் B.E மற்றும் B.Tech படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஆன்லைன் தேர்வு ஜனவரி 27ஆம் தேதி நேற்று முதல் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் இரண்டு பிரிவுகளாக தேர்வு நடத்தப்படும் நிலையில் காலை 9 மணி முதல் 12 மணி வரை ஒரு தேர்வும், மதியம் மூன்று மணி முதல் ஆறு மணி வரை மற்றொரு தேர்வு நடைபெறும். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் களை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதேசமயம் மாணவர்கள் தங்களது முழுமையாக நிரப்பப்பட்ட நுழைவுச்சீட்டை தேர்வு நடைபெறும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போட வேண்டும். அப்படி போடாமல் இருந்தால் அவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது. தேர்வர்கள் குடிநீர் பாட்டில், பேனா, ஹால் டிக்கெட், அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை மட்டுமே கொண்டுவர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.