தெலுங்கானாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று தற்போது ஆட்சிக்கு வந்துள்ளது. அரசு ஆட்சி அமைத்ததும் பல சிறப்பு திட்டங்களை அமல்படுத்த தொடங்கியுள்ளது. அதன்படி பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் நிதி உதவியும், 500க்கு கேஸ் சிலிண்டர் எரிவாயு வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 15,000, ரிதுபரேசா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 12000 உதவி தொகை வழங்கப்படஉள்ளது.

கல்வி பயிலும் மாணவர்களுக்கு யுக விகாஸ் திட்டத்திற்கு மேல் ஐந்து லட்சம் ரூபாய் கல்வி காப்பீடு அட்டை ,முதியவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் விதமாக 4000 ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.