சத்தீஸ்கர் மாநிலத்தில் அனைத்து ரேஷன் அட்டைகளையும் புதுப்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் ரேஷன் கார்டு புதுப்பிக்கும் பணிகள் கடந்த ஜனவரி 25ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. ரேஷன் கார்டுகளை பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டு உள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக ரேஷன் கார்டை எப்படி புதுப்பிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

அதற்கு முதலில் என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ரேஷன் கார்டு புதுப்பித்தல்  khadya.cg.nic.in என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். ரேஷன் கார்டு புதுப்பித்தல் விருப்பத்தை தேர்ந்தெடுத்த பிறகு திரையில் பின்வரும் மூன்று விருப்பங்கள் இருக்கும். அதாவது ரேஷன் கார்டு புதுப்பித்தல், ரேஷன் கார்டு புதுப்பித்தல் நிலையை சரிபார்த்தல் மற்றும் ரேஷன் கார்டை எப்படி புதுப்பிப்பது ஆகியவை இருக்கும். இதில் ரேஷன் கார்டு புதுப்பித்தல் விண்ணப்பத்திற்கான முதல் விருப்பத்தை தேர்வு செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் விண்ணப்பத்தின் நிலையை அறிவதற்கு ரேஷன் கார்டு புதுப்பித்தலின் நிலையை சரிபார்க்க இரண்டாவது விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

ரேஷன் கார்டு புதுப்பித்தல் தொடர்பான பயனர் கையேட்டை பெறுவதற்கு ரேஷன் கடை எப்படி புதுப்பிப்பது என்ற விருப்பத்தை பயன்படுத்தலாம். ரேஷன் கார்டில் இருக்கும் கியூ ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலமாக அப்டேட் செய்துவிடலாம். இல்லையென்றால் ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட ரேஷன் கார்டு எண் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி அப்டேட் செய்ய முடியும். கியூ ஆர் ஸ்கேன் அல்லது ரேஷன் கார்டு மற்றும் மொபைல் எண்ணை சரிபார்த்த பின்னர் ரேஷன் கார்டின் இ கேஒய்சி உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். அதில் அப்டேட் செய்ய வேண்டிய விவரங்களை உள்ளிட்டு பிறகு ரேஷன் கார்டு புதுப்பித்தல் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்தி உங்களுக்கு வரும்.