முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்மோகன் தவான் (83) உடல் நலக்குறைவால் காலமானார். மொகாலி அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 1989 ஆம் ஆண்டு சண்டிகர் எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் சந்திரசேகர் ஆட்சியில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்துள்ளார். பி எஸ் பி, காங்கிரஸ் மற்றும் பாஜக என பல்வேறு அரசியல் கட்சிகளிலும் அவர் இருந்துள்ளார்.