பொங்கல் பண்டிகையை ஒட்டி பெரும்பாலான பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இதனை காண சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது குடும்பத்தினருடன் சென்று ஜல்லிகட்டை கண்டு கழித்து மகிழ்கின்றனர். அந்த வகையில் கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை இராட்சண்டர் திருமலை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுள்ளது.

இதனை குழந்தையை வேல் என்பவர் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மாடு முட்டியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தோர்  படுக்காயமடைந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் குழந்தைவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.