தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் கூறியதாவது, ஆன்லைன் புக்கிங் தளத்தில் கூடுதலான சேவைகளும், ஆன்லைனில் புக்கிங் செய்பவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் அரசு போக்குவரத்துக் கழகப் பஸ்களில் 12% முன்பதிவு அதிகரித்துள்ளது. மேலும் ஐ ஆர் சி டி சி டிஜிட்டல் வர்க்கத்திற்கான திறந்த நெட்வொர்க் மற்றும் இ-சேவை மையங்களுடன் பஸ் டிக்கெட் முன்பதிவை இணைக்கும் திட்டங்களால் பயணிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.