உலகின் மிகவும் தனிமையான கண்டங்களில் ஒன்றான அண்டார்டிகாவில் உள்ள மெக்முர்டோ நிலையத்தில் ஆறு மாதச் சுற்றுச்சூழல் ஆராய்ச்சிப் பணிக்கு ஒரு 29 வயது இளைஞருக்கு அரிய மற்றும் மிக அதிக சம்பளத்துடன் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரது நிறுவனம் வழங்கும் ஒப்பந்தத்தின்படி, பயணச் செலவுகள், உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்தும் உட்பட சுமார் $145,000 (இந்திய மதிப்பில் தோராயமாக ₹1.31 கோடி) சம்பளம் கிடைக்கும்.

Got offered a 6 month contract in Antarctica and idk if I should take it
byu/Importantterry inFire

இந்தக் குறைவான கால வேலை தனக்குப் பெரிய சேமிப்பை அளித்து, 45 வயதிற்குள் நிதி இலக்குகளை அடைய உதவும் என்று அந்த இளைஞர் சமூக வலைதளமான ரெட்டிட்டில் பதிவிட்டுள்ளார்.

“அண்டார்டிகாவில் வாடகை, வெளிச் செலவுகள் போன்ற எதுவும் இல்லாததால், எனது மொத்தச் சம்பளத்தையும் சேமிக்க முடியும்” என்று கூறியுள்ள அவர், இது தனது தொழில் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், எல்லோரையும் விட்டு ஆறு மாதங்கள் விலகி இருப்பது சற்று அச்சமூட்டுவதாகவும், இது தனது மூன்று வருடக் காதலியுடனான உறவைப் பாதிக்குமோ என்றும் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பயனர்கள், “ஆறு மாதங்களில் உங்களது நிகர மதிப்பை இரட்டிப்பாக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு இது, நிச்சயம் தவற விடாதீர்கள்”, “இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு” என்று கூறி, அவருக்கு உற்சாகமூட்டி ஆதரவளித்துள்ளனர்.