
செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் லியோனி, சுதந்திர போராட்ட வீரர்களுக்கு இன்னும் அவர்களுக்குரிய கௌரவம், சலுகைகள் நிறைய கொடுக்க வேண்டும் என்ற சுதந்திர போராட்ட வீரர் பால சுப்பிரமணியன் அய்யாவுடைய கருத்து வரவேற்க தகுந்தது தான். மத்திய அரசு சுதந்திரப் போராட்ட வீரர்களை இன்னும் நிறைய கௌரவப்படுத்த வேண்டும்…. அவர்களுக்குரிய பிள்ளைகளுக்கு… வாரிசுகளுக்கு பணி நியமனத்தில் வந்து முன்னுரிமை கொடுப்பது எல்லாம் அவசியமான தேவை…. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை, அது செய்ய வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜர் இருக்கிறார். அவர் கல்வி பாடசாலை நிறைய திறந்தார். அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதிக்காகவா பள்ளியை நிறைய திறந்தார். அவர் இந்தியா முழுவதும் சுதந்திர போராட்ட வீரராக தான் இருக்கிறார். ஆனால் அவரை ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குள் அடைப்பது, அந்த ஜாதியை சேர்ந்தவர்களே ஒழிய, அவருடைய தவறு கிடையாது.
எந்த தேசிய தலைவர்களும்…. மக்களுக்காக ஜாதி, மத, பேதம் அற்று தான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அந்த தலைவர்கள் குறிப்பிட்டு ஜாதியை சேர்ந்திருப்பதால், அந்த ஜாதியை சேர்ந்தவர்கள்… இவர் எங்கள் தலைவர்கள் அப்படின்னு சொல்லிட்டு… அவர்களை ஜாதிக்குள்ள அடக்கி வைத்து தவறுதான். அது அந்த தலைவர்கள் மீது தவறு கிடையாது. அது அந்த ஜாதியை சேர்ந்த மக்கள் செய்யக்கூடிய தவறு.
அதனால் அவர்கள் எல்லோரும் தேச தலைவர்களாக….. எல்லோருக்கும் பொதுவான தலைவர்களாக இருக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. அவர்களை ஜாதிய தலைவர்களாக சித்தரிப்பது உண்மையிலே அது, தவறான விஷயம். தேசிய தலைவர்களாக…. எல்லோருக்கும் பொதுவான தலைவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் எல்லாருடைய ஆசை என தெரிவித்தார்.