தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் தமிழில் விஜய், தனுஷ், ரஜினி என்ன பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ரேயா அண்மையில் கன்னடத்தில் வெளியான கப்ஜா படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதன் பிறகு ஹிந்தியில் வெளியான திரிஷ்யம் படத்திலும் நடிகை ஸ்ரேயா அஜய் தேவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் ஒரு படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது நடிகை ஸ்ரேயாவிடம் நிருபர் ஒருவர் நீங்கள் தமிழ் சினிமாவில் இவ்வளவு வருடங்களாக நடித்தும் ஏன் இன்னும் தமிழில் பேச மாட்டேங்கிறீங்க என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு நடிகை ஸ்ரேயா எனக்கு ஹிந்தியும் சரியாக தெரியாது. ஆங்கிலமும் சரியாக தெரியாது என்று எனக்கு நெருக்கமானவர்கள் சொல்வார்கள். எனக்கு மொழி கற்றுக் கொள்வது என்பது ரொம்ப கஷ்டம். படங்களில் நடிக்கும் போது வசனத்தை மட்டும் கற்றுக் கொள்வேன். ஆனால் பின்னர் அதையும் மறந்து விடுவேன் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை ஸ்ரேயா தமிழ் சினிமாவில் 10 வருடங்களாக நடித்த நிலையிலும் அவருக்கு இதுவரை தமிழ் பேச தெரியவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.