ஜப்பானில் வேலையில்லாத 38 வயது நபரான தகுயா ஹிகாஷிமோட்டோ, தனது தந்திரமான மூளையைப் பயன்படுத்தி ஒரு உணவு விநியோக ஆப் மூலம் இரண்டு ஆண்டுகளாக இலவசமாக உயர்ரக உணவுகளைச் சாப்பிட்டு, நிறுவனத்திற்கு 21 லட்ச ரூபாய் (37 லட்சம் யென்) நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.

நாகோயாவைச் சேர்ந்த இவர், ‘டெமே-கேன்’ என்ற உணவு விநியோக தளத்தில் ஈல் பென்டோ, ஹாம்பர்கர் ஸ்டேக், ஐஸ்கிரீம் போன்ற விலையுயர்ந்த உணவுகளை 1000 முறைக்கு மேல் ஆர்டர் செய்து, ஒவ்வொரு முறையும் “உணவு டெலிவரி ஆகவில்லை” என்று புகார் செய்து முழு பணத்தையும் திரும்பப் பெற்றார்.

124 போலி கணக்குகளை உருவாக்கி, புனைவு பெயர்கள், தவறான முகவரிகள், மற்றும் ப்ரீபெய்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்தி இந்த மோசடியை அரங்கேற்றினார்.

இந்த மோசடி ஜூலை 30 அன்று தகுயா மீண்டும் ஐஸ்கிரீம் மற்றும் சிக்கன் ஸ்டேக் ஆர்டர் செய்து ரீஃபண்ட் கோரியபோது நிறுவனத்திற்கு சந்தேகம் ஏற்பட்டு வெளிச்சத்திற்கு வந்தது.

விசாரணையில், இவர் 1095 முறை ஆப்-இன் ரீஃபண்ட் கொள்கையைப் பயன்படுத்தி மோசடி செய்தது தெரியவந்தது. இதனால் உணவு விநியோக நிறுவனங்கள் இப்போது ஐடி சரிபார்ப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்புகளை கடுமையாக்கி வருகின்றன.

இவரது செயலால் மக்கள் கோபமடைந்து, “இவ்வளவு புத்திசாலித்தனத்தை வேலையில் பயன்படுத்தியிருந்தால், நல்ல வேலையில் இருந்திருப்பார்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.