மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் டங்ஸ்டன் கனிம வள சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதற்கு ஆளும் கட்சியான திமுக அரசு ஒத்து போவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்தன. இதனால் அப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மோசம் அடையும் என்பதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இது குறித்து பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, கடந்த 2023 ஆம் ஆண்டு பிரபல ஊடகத்தின் வழியாக வெளியே வந்த செய்தியை எடுத்துக்காட்டி பேசி உள்ளார்.

அதில் மதுரையில் டங்ஸ்டன் கனிம வளம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்கான சுரங்கம் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கூறியுள்ளதாகவும் கனிமவள அதிகாரி ஒருவர் கூறிய செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்பின் 2024ஆம் ஆண்டு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒப்புதல் புள்ளி கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது ஆனால் தற்போது நவம்பர் மாதம் வரை கடந்த 10 மாதங்களாக டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான எதிர்ப்பு குறித்த எந்த கோரிக்கையையுமே திமுக அரசு மத்திய அரசிடம் கொடுக்கவில்லை.

ஆனால் தற்போது அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல நாடகமாடுகிறார்கள் என குற்றம் சாட்டினார். இதேபோன்று ஏற்கனவே திமுக அரசு டெல்டா பகுதியில் மீத்தேன் எடுப்பதற்கு குறித்த விவகாரத்தில் தெரியாமல் கையெழுத்து விட்டு விட்டேன் என நாடகம் ஆடியது போன்றே தற்போது நாடகம் ஆடுகிறார்கள். ஆனால் இனியும் இந்த நாடகம் பொதுமக்களிடம் எடுபடாது என அண்ணாமலை கூறினார்.