மத்திய அரசு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி ஷாப்பிங் மால்கள், கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறை வியாபார கடைகள் போன்றவைகளில் மொபைல் ஃபோன்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது என்று அறிவித்துள்ளது. அதன்பிறகு இனி மொபைல் நம்பரை கேட்டு கடையின் நிர்வாகம் வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்யக்கூடாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் செல்போன் நம்பர்களை கொடுப்பதால் சைபர் மோசடிகள் அதிகமாக நடக்க வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் பயப்படுகிறார்கள். இது தொடர்பாக நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது. மேலும் இதன் காரணமாகத்தான் தற்போது மொபைல் நம்பர்களை பொதுமக்கள் சூப்பர் மார்க்கெட் மற்றும் கடைகள் போன்றவைகளில் கொடுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது என மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.