உலகளவில் இணைய சேவையின் வேகம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் 118 வது இடத்தில் இருந்து 69 ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி நாடு முழுவதும் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் 5ஜி சேவை அறிமுகம் செய்வதற்கு முன்பு அறிமுகம் செய்வதற்கு பிறகும் இணைய சேவையின் வேகம் 115 சதவீதம் அதிகரித்துள்ளதாக நெட்வொர்க் நுண்ணறிவு அமைப்பான ஓக்லா தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக உலக அளவில் இணைய சேவையின் வேகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 118 வது இடத்தில் இருந்து 69 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்தியாவில் தற்போது அதிகரித்துள்ள இணையத்தின் வேகம் 512. 57 MBPS என ஓக்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.