உத்தரபிரதேசத்தில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க உத்தரப்பிரதேச அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பாட்டுல்களுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது சரி இல்லை என குறிப்பிட்டுள்ளது. எனவே அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலகங்களிலும் நடத்தப்படும் கூட்டங்களில் பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டுக்கு தடை விதித்தேன் என அச்சிடப்பட வேண்டிய தேவை ஏற்பட்டால் காகிதத்தில் இரண்டு பக்கமும் வச்சிட்டு உபயோகப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.