லிவ் இன் உறவு முறையை சட்டரீதியாக பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக லிவ் இன் உறவு முறையில் இருப்பவர்கள் கொலைகள் அதிகரித்து நாட்டையே உலுக்கி வருகின்றது. இந்நிலையில் லிவ் இன் உறவு முறையை சட்டரீதியாக பதிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உள்ளடக்க விதிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லாததால் தான் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பெரிய குற்றங்கள் அதிகரித்து இருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் அதனை சட்டப்படி உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும் எனவும் மனுதாரர் மனுவில் தெரிவித்துள்ளார்.