அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கியது. இதுவரை 16 நாட்கள் நடந்து கொண்டு இருக்கின்றது. 41 கிலோ மீட்டர் நீளம்,  12 கிலோமீட்டர் அகலம்..  340 சதுர கிலோமீட்டர்  எல்லைக்குள் தான்  இஸ்ரேலுக்கும் – ஹமாஸ்சுக்கும் தொடர்ச்சியாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினுடைய தாக்குதல் மிகவும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

14 நாட்களுக்குப் பிறகு காசா மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் மற்றும் மருந்து பொருட்கள் சவப்பெட்டிகள் அடங்கிய 20 டிரக்குகள் எகிப்து எல்லையான ரப்பாவழியாக  உள்ளே சென்றது.  20 டிரக்கில் வெறும் 22,000 வாட்டர் பாட்டில் மட்டும்தான் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது. காசா நகரத்தில் மொத்தம் 23 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில் 23 லட்சம் மக்களுக்கு வெறும் 22 ஆயிரம் வாட்டர் பாட்டில் எப்படி போதுமானதாக இருக்கும் என ஐநா சபை கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

இந்த நிலையில் தான் நிவாரண டிரக்குகள் வரும் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதாக ஒரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மேலும் நேற்று காலையில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு காசா பகுதியில் தண்ணீர் அருந்தும் தொட்டியில் பாலஸ்தீன மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பைப்ல தண்ணி குடிச்சிட்டு இருக்கும்போது மேலே இருந்து ஒரு வானொலி தாக்குதல் நடத்துறாங்க இஸ்ரேல் ராணுவம்.

அந்த தாக்குதலில் நேரடியாக மக்கள் சிதறி போவதும்,  தண்ணீர் தொட்டி வெடித்து  சிதறுவதை பார்க்க முடிகிறது. அவர்கள்  ஹமாஸ் அமைப்பாக இருக்க முடியாது. அவர்கள் அப்பாவி  பாலஸ்தீன மக்கள் என கூறப்படுகிறது.இஸ்ரேலை பொறுத்த வரை ஒருபுறம் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறார்கள்.  ஆனால் பாலஸ்தீன மக்கள் தண்ணீர் அருந்து வரும்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.