ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பு என கூறப்படும் கவச அமைப்புகளை அமெரிக்கா தற்போது இஸ்ரேலுக்கு அனுப்புகிறது.  போர்க்கப்பல், விமான படைகளை தொடர்ந்து எதிரிகளின் ராக்கெட்டுகளை சுட்டு சுட்டு வகையில்  THAAD அமைப்பானது உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே இஸ்ரேலின் எல்லைகளில் ஐயான் டோம் இருக்கின்றது. எதிரியினுடைய ராக்கெட் வரும் போது அதனை கண்டறிந்து சரியாக சுட்டு விழுத்தும் வகையில் ஐயான் டோம் சிஸ்டம் இருக்கிறது.

ஆனாலும் அந்த ஐயான் டோமை விட தற்பொழுது அமெரிக்கா அனுப்புகின்ற THAAD என்கின்ற அமைப்பு அதிக வேகத்தோடும், அதிக வீரியத்தோடும் வரும் ராக்கெட்டுகளை உடனடியாக சுட்டு வீழ்த்த வகையில் இந்த THAAD அமைப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதை அமெரிக்க போர்க்கப்பல் மூலம் தற்போது பென்டகன் அனுப்புவதாக கூறியுள்ளது.

இதுகுறித்து பென்டகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கிய நாளிலிருந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதட்டம் விழாவுகின்றது. தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வருவதால் அதனை இஸ்ரேல் ராணுவம் எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பான THAADஐ மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு நாங்கள் அனுப்புகிறோம். போரின் தீவிரத்தை பொறுத்து மேலும் பல ஆயுதங்கள் அனுப்பப்படும் என கூறுகிறார்கள்.

அதே போல அமெரிக்க வீரர்கள் 2000 பேர் தற்போது அமெரிக்க போர்க்கப்பலில் மத்திய தரை கடல் நோக்கி போகப்போறாங்க என்கின்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு போர்க்கப்பல்,  ஒரு விமானம் தாங்கி கப்பல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணமாக அமெரிக்கா சொல்வது…  ஈரானுடைய அச்சுறுத்தல்கள் அதிகமாக இருக்கிறது.

ஹிஸ்புல்லா அமைப்பு, ஜோர்டானில் இருக்கும் போராளி அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம் என்கின்ற ரீதியில் பாதுகாப்பிற்காக நாங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.  தற்போது ஏவுகணையினுடைய எண்ணிக்கை இஸ்ரேலுக்குள் அதிகமாக வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்பு கவசத்தை அனுப்புவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.