காசாவில் நடத்தப்படும் போர்களால் குழந்தைகளுக்கு பேரழிவு ஏற்படுகிறது. தற்போது வரை இந்த போரின் காரணமாக குறைந்தது 14 ஆயிரம் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். அங்கு பாதுகாப்பான இடமில்லை. அங்கு வாழும் குழந்தைகள் அனைவரும் போரின் அதிர்ச்சிகரமான அனுபவத்தை அனுபவிக்கின்றனர். இதன் விளைவுகள் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

இதுகுறித்து பாலஸ்தீன அகதிகளுக்கான ஐநா நிவாரண மற்றும் பணி முகமையின் ஆணையர் ஜெனரல் பிலிப் லாஸ்சாரிணி கூறியதாவது, காசா குழந்தைகளின் கல்லறையாக மாறிவிட்டது. இஸ்ரேல் ராணுவத்தால் பாலஸ்தீன குழந்தைகள் படுகொலை செய்யப்படுகிறார்கள், காயப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் தப்பி ஓட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அவர்களது பாதுகாப்பு, கல்வி, விளையாட்டு என அனைத்தையும் இழந்து விட்டனர். அவர்களின் குழந்தை பருவம் திருடப்பட்டு விட்டது என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.