டெல்லி நோக்கிச் செல்லும் ஜிடி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 12615) ரயிலில் விதிஷா மற்றும் பீனா ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த பயங்கர மோதல் நடந்துள்ளது. ரயிலில் உணவு விநியோகம் செய்யும் பேண்ட்ரி ஊழியர்களுக்கும், ஒரு  பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வீடியோவின் தொடக்கத்தில் ஒரு ஊழியர் அந்தப் பயணியை அடிக்கிறார். அடுத்த சில நிமிடங்களில், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கொண்டு அந்தப் பயணியை மிகக் கொச்சையான வார்த்தைகளால் திட்டியபடி, வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்துச் செல்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Gayakwad Ashish (@ashishgayakwad_mh_34_)

எப்படியாவது அந்தப் பயணியை பேண்ட்ரி காருக்குள் இழுத்துச் சென்று ‘கவனிக்க’ அவர்கள் முயன்றனர். ஆனால் அந்தப் பயணி தப்ப முயன்று போராடுகிறார்.

மிகவும் வருத்தமளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், இந்தச் சம்பவம் ஒரு ஸ்லீப்பர் கோச்சில் மக்கள் முன்னிலையிலேயே நடக்கிறது. மேலே இருக்கும் இருக்கையில் ஒருவர் அமர்ந்து போனில் பேசிக்கொண்டே இந்தத் தாக்குதலை ஒரு டிவி சீரியல் பார்ப்பது போல வேடிக்கை பார்க்கிறார்.

எவருமே அந்தப் பயணியை மீட்க முன்வரவில்லை. அங்கிருந்த ஒருவர் இந்த அத்துமீறலை ரகசியமாக வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.