ஒரு பெண் தனது கடின உழைப்பால் சேமித்த பணத்தை மண்குடத்தில் பதுக்கி வைத்து, ஒரு நாள் அதை உடைத்து எண்ணி மகிழலாம் என்று கனவு கண்டார். ஆனால், அவர் குடத்தை உடைத்தபோது காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. குடத்திற்குள் இருந்த பணத்தாள்கள் அனைத்தும் எறையால் தின்னப்பட்டு முற்றிலும் பயனற்றவையாக மாறியிருந்தன.

பொதுவாக மண்குடங்களில் நாணயங்களைச் சேமிப்பது வழக்கம் என்றாலும், இந்தப் பெண் பணத்தாள்களை வைத்திருந்தார். இந்த சோகமான காட்சி இன்ஸ்டாகிராமில் @rapout2.0 என்ற பயனர் கணக்கில் பகிரப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, பார்ப்போரை பதற வைத்துள்ளது. இந்த சம்பவம், நீண்ட காலம் பணத்தை மண்குடத்தில் வைப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்த்தியதாக அமைந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Rapout2.0 (@rapout2.0)

வீடியோவைப் பார்த்த பயனர்கள் இதுகுறித்து சமூக ஊடகங்களில் விவாதித்து வருகின்றனர். ஒருவர், “இது உண்மையான மண்குடம் இல்லை; செராமிக் பவுடர் அல்லது பிஓபி (பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ்) குடமாக இருக்கலாம், ஏனெனில் உண்மையான மண்குடத்தில் எறை புழு பரவாது” என்று கருத்து தெரிவித்தார்.

மற்றொருவர், “பச்சை மண்ணால் ஆன குடமாக இருக்கலாம்; நெருப்பில் சுடப்பட்ட குடத்தில் எறை புழு வராது” என்று கூறினார். இன்னொரு பயனர், “குடத்தை ஈரமான இடத்தில் வைத்திருப்பதால் இப்படி நடந்திருக்கலாம்; இத்தகைய சிறிய விஷயங்களை யாரும் கவனிப்பதில்லை” என்று குறிப்பிட்டார். இந்த வைரல் வீடியோ, பணத்தை பாதுகாப்பாக வைப்பதற்கு வங்கிக் கணக்கு அல்லது முதலீடு போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளது.