டெல்லி மெட்ரோ ரயில் எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய சம்பவங்களுக்குப் பெயர்போனது. அந்த வகையில், தற்போது ஒரு மெட்ரோ ரயிலின் உள்ளே இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு பயங்கரமாகச் சண்டையிட்டுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

கூட்ட நெரிசலில் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டதுதான் இந்த மோதலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. சக பயணிகள் திகைத்துப் போய் வேடிக்கை பார்க்க, அந்த இரண்டு பெண்களும் ஆக்ரோஷமாகத் தாக்கி மல்லுக்கட்டியக் காட்சிகள் பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு நகைச்சுவையான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “டெல்லி மெட்ரோ என்பது பொதுப் போக்குவரத்து சாதனம் அல்ல, அது ஒரு ரியாலிட்டி ஷோ” என்று ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.

மற்றொருவர், “இவ்வளவு முடியைப் பிய்த்துக்கொண்டார்களே, இனி இவர்கள் பயோட்டின் மாத்திரைதான் சாப்பிட வேண்டும்” என நக்கலடித்துள்ளார்.

இன்னும் சிலரோ, “ஆயிரம் முறை டெல்லி மெட்ரோவில் பயணித்தும் எனக்கு மட்டும் இப்படி ஒரு சண்டையைப் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லையே” என வேடிக்கையாக வருத்தம் தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ, டெல்லி மெட்ரோவின் சண்டை வீடியோக்கள் மட்டும் ட்ரெண்டிங்கில் குறையவே இல்லை.