ஓடும் காரில் சாகசங்கள் (Stunts) செய்வது ஆபத்தானது என்றாலும், சிலர் ஆபத்தைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் இதுபோன்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், ஒருவர் அருகில் ஓடிக் கொண்டிருக்கும் மற்றோர் கார் மீது ஏறி, அங்கிருந்துத் தன் கார் மீது திரும்பச் சென்று ஸ்டீயரிங்கை மீண்டும் பிடிக்கும் மிகவும் ஆபத்தானச் சாகசத்தை நிகழ்த்தியுள்ளார்.

இந்த வீடியோவில், இரண்டு கார்கள் இணையாகச் செல்லும் போது, ஒரு காரை ஓட்டும் நபர் திடீரென்று ஸ்டீயரிங்கை விட்டுவிட்டு, உடன் வரும் கார் மீது சவாரி செய்கிறார்.

சில வினாடிகளுக்குப் பிறகு, அவர் மீண்டும் டிரைவர் இல்லாதத் தனது கார் மீது ஏறி, ஸ்டீயரிங்கைப் பிடித்து ஓட்டத் தொடங்குகிறார். இது பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருந்தாலும், இத்தகையச் செயல்கள் பேராபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதால், இதுபோன்றச் சாகச முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்றுப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த வீடியோ 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டப் பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.