உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ராஸ் (Hathras) மாவட்டத்தில் உள்ள சிகந்தர ராவ் (Sikandra Rao) நகரில், பைக்கில் மூன்று பேர் வந்த இளைஞர்கள், சாலையில் நடந்து சென்றப் பெண் ஒருவரை அறைந்துவிட்டுத் தப்பிச் சென்ற கொடூரச் சம்பவம் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமைதியான சாலையில் இரண்டு பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிர்த் திசையிலிருந்து வேகமாக வந்த பைக், அருகில் வந்ததும் நடுவில் அமர்ந்திருந்த நபர் திடீரெனக் கையை நீட்டி, அதில் ஒருப் பெண்ணின் கன்னத்தில் பலமாக அறைந்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
उत्तर प्रदेश : हाथरस के कस्बा सिकंदराऊ में कोचिंग सेंटर से लौट रही छात्रा के गाल पर हाथ मारकर मनचले भाग गए !!@madanjournalist pic.twitter.com/flLsqxK4BY
— Sachin Gupta (@SachinGuptaUP) December 12, 2025
இந்த அதிர்ச்சிச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் குழப்பத்துடன் திரும்பிப் பார்ப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. கேமரா பொருத்தப்பட்ட பகுதியில், இளைஞர்கள் மிகவும் துணிச்சலாக இந்தத் தாக்குதலை நடத்தியது, பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளது.
உள்ளூர்வாசிகள், இதுபோன்றச் செயல்கள் நகரின் சில பகுதிகளில் அடிக்கடி நடப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவத்துக்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து, பெண்களை கேலி செய்வோருக்குக் எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
