
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசிபாளையத்தில் சுங்கத்து கருப்பராயன் கோவில் உள்ளது. இங்கு வாணிபுத்தூரில் வசிக்கும் ஞானசேகரன், மாதேஸ்வரி உள்ளிட்ட பலர் கிடாய் வெட்டி பொங்கல் வைத்து கொண்டிருந்தனர். அப்போது பொங்கல் வைக்கும் போது எழுந்த புகையின் காரணமாக அருகில் இருந்த மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் கலைந்தது.
இதையடுத்து அங்கிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஞானசேகரன், மாதேஸ்வரி, 8 வயது சிறுவன் தர்ஷன், காந்தி, நஞ்சுண்டன், ராஜன் உள்ளிட்ட 9 பேர் மீது தேனீக்கள் கொட்டியது. இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.