நாசிக் நகரத்தில் சிறிய மோதல் காரணமாக ஆட்டோ டிரைவர் இளைஞரை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக தன் முன்னால் வந்த ஆட்டோவை லேசாக உரசி உள்ளது. இதனால் அந்த ஆட்டோ ஓட்டுநர் காரை வழிமறித்து கார் ஓட்டுநருடன் தகராறு செய்தார். இந்த தகராறு தொடர்ந்து முற்றிய நிலையில் ஆட்டோ ஓட்டுநர் காரில் இருந்து இளைஞரை வெளியே இழுத்து தள்ளி தாக்குதலில் ஈடுபட்டார்.

அப்போது அந்த காரில் இருந்த பெண்கள் அச்சத்துடன் கைகூப்பி மன்னிப்பு கேட்டனர். இருப்பினும் அந்த ஆட்டோ ஓட்டுநர் தனது கோபத்தை கட்டுப்படுத்தாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் ஆட்டோ ஓட்டுனரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கண்டிப்பாக போலீஸ் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.