மத்தியப் பிரதேசத்தில், ரயில் பயணிகளுக்கு விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படும் சமோசாக்கள் (Samosas), மிகவும் அசுத்தமான மற்றும் சுகாதாரமற்ற (Unhygienic) சூழ்நிலையில் தயாரிக்கப்படுவதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட ரயில் பயணங்களில் இதுபோன்றப் பலகாரங்கள் ஆறுதல் அளித்தாலும், இந்த வீடியோ உணவுப் பாதுகாப்புத் தரங்கள் குறித்துப் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
रेलवे में सप्लाई होने वाला खाना आखिर किस मानक पर तैयार हो रहा है?
खाद्य सुरक्षा अधिकारियों ने जिस दुकान से गंदे बोरे पर पड़े हुए समोसे पकड़े — क्या यही समोसे @IRCTCofficial के नाम पर यात्रियों को परोसे जा रहे थे?कितने समय से यह गंदा और असुरक्षित खाना रेलवे स्टेशनों पर बेचा जा… pic.twitter.com/rLRrGx3qVA
— खुरपेंच Satire (@Khurpench_) November 29, 2025
சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்பு நிர்வாகம் (Food Safety Administration) உடனடியாக அந்த இடத்தில் சோதனை நடத்தியது. ஆய்வின் முடிவில், சமோசாக்கள் நேரடியாகத் தரையிலும், கிழிந்த, அழுக்கடைந்த பழைய கோணிப்பைகள் (Old Sacks) மீதும் வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
இத்தகையச் சூழல் உணவு நச்சுத்தன்மை (Food Poisoning) மற்றும் வாந்திக்குக் காரணமான பாக்டீரியாக்களை உருவாக்கும் அபாயம் உள்ளது என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.
வைரலான இந்த வீடியோ குறித்துப் பலரும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, DRM ஜபல்பூர் ரயில்வே நிர்வாகம், இந்தச் சம்பவம் ரயில்வே வளாகத்தில் நடக்கவில்லை என்று விளக்கமளித்த போதும், முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
