சத்தீஸ்கர் மாநிலம், சூரஜ்பூரில் (Surajpur) உள்ள ஹன்ஸ் வாஹினி வித்யா மந்திர் (Hans Vahini Vidya Mandir) என்ற பள்ளியில், 4 வயது மழலையைப் படிக்காததற்காக இரண்டு ஆசிரியைகள் கொடூரமாகத் தண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான்காம் வகுப்புக்கான வீட்டுப் பாடத்தை (Homework) முடிக்காததால், அந்தக் குழந்தை நிர்வாணப்படுத்தப்பட்டு, கயிற்றால் கட்டப்பட்டு, பள்ளியின் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது.
सूरजपुर जिले में होमवर्क नहीं करने पर छोटे बच्चे को पेड़ से घंटो लटका दिया….
सूत्र: वायरल वीडियो #Chhattisgarh #Education @GajendraYdvBJP pic.twitter.com/1iqbSW8RfB
— Tanmay (@SakalleyTanmay) November 25, 2025
இந்தச் சம்பவத்தின் திகில் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து, அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். அந்த வீடியோவில், குழந்தை உதவிக்காக அழுது அலறுவதும், அதைப் பொருட்படுத்தாமல் கஜல் சாஹு மற்றும் அனுராதா தேவாங்கன் என அடையாளம் காணப்பட்ட இரண்டு ஆசிரியைகள் அருகே நிற்பதும் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவத்தை ‘கடுமையான தவறு’ என்று பள்ளி நிர்வாகம் மன்னிப்புக் கோரியுள்ள போதும், பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்கள், பொறுப்பற்ற ஆசிரியைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். குழந்தை பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டாலும், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் கோபம் எழுந்துள்ளது.
