பெங்களூரைச் சேர்ந்த ஓரக்கிள் (Oracle) மென்பொருள் பொறியாளர் ஒருவர், வார இறுதி நாட்களில் கூடுதல் வருமானத்திற்காக அல்லாமல், தனது தனிமையைப் போக்க ராபிடோ (Rapido) பைக் ஓட்டுநராகப் பணிபுரியும் கதை சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

அந்த இளைஞர், சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பிரீமியம் ரக TVS Ronin பைக்கில் ராபிடோ ஓட்டுநராக வந்துள்ளார். இதைக் கண்ட ஒரு பயணி அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்த பொறியாளர், தான் ஓரக்கிளில் SDE-2 பதவியில் இருப்பதாகவும்,

ஆனால், கார்ப்பரேட் வேலை மற்றும் ரிமோட் வொர்க் (Remote Work) காரணமாக ஏற்பட்ட தனிமையைப் போக்கவும், மக்களுடன் உரையாடவும் மட்டுமே வார இறுதி நாட்களில் இந்த வேலையைச் செய்வதாகவும் விளக்கமளித்துள்ளார்.

இந்தக் கதை, இந்தியாவின் நகர்ப்புறப் பணியாளர்களிடையே அதிகரித்து வரும் மன அழுத்தம் மற்றும் சமூகத் தனிமை (Work-related Isolation) குறித்த விவாதங்களைத் தூண்டியுள்ளது.

இதேபோல, ரூ. 32 லட்சம் வரை சம்பளம் வாங்கும் மற்றொரு பொறியாளரும் தனிமையைப் போக்க ராபிடோ ஓட்டுவதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. இது வேலை-வாழ்க்கை சமநிலை (Work-Life Balance) மற்றும் மனநலம் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.