எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை கண்டு மத்திய பாஜக அரசு அஞ்சுகிறது என்றும் மு க ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது twitter X வாயிலாக டெல்லியில் இருக்கக்கூடிய ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் கைதுக்கு தன்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அதேபோன்று தமிழகத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும்,  மூத்த தலைவருமான ஜெகத்ரட்சகன் இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் தொடர்ச்சியாக இன்று காலை முதல் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருவதற்கு முதலமைச்சர் மத்திய பாஜக அரசின் பழிவாங்கல் அரசியலுக்கு எல்லையே இல்லை என தெரிவித்து தன்னுடைய கடுமையான கண்டனத்தை ட்விட்டர் வாயிலாக பதிவு செய்திருக்கிறார்.

எதிர்க்கட்சிகளின் அரசியலை பலி வாங்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டிய இருக்கக்கூடிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்,  அமலாக்க துறையை உச்சநீதிமன்றம் எச்சரித்தும் பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது.  சட்டத்தின் ஆட்சியையும்,  ஜனநாயகத்தையும் புறக்கணிப்பதை அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பாஜக தெளிவாக பயப்படுகிறது.

நாட்டில் இருக்கும் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல்,  தற்போதைய அரசு வளர்ந்து வரக்கூடிய எதிர்கட்சிகளின் ஒற்றுமையை குறைப்பதற்காக அமலாக்கத்துறை உள்ளிட்டவைகளை தவறாக பயன்படுத்துகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார். உங்களுடைய அரசியல் பழிவாங்கலை உடனடியாக நிறுத்துங்கள் என தெரிவித்து, திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் இல்லம் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்று வரும் சோதனைக்கு கட்டணம் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் கைதுக்கும் கண்டனத்தை  தெரிவித்துள்ளார். இதேபோன்று டெல்லியில் இருக்கக்கூடிய தனியார் செய்தி நிறுவனங்களில் சோதனை மற்றும் அதனுடைய நிறுவனர் கைது செய்யப்பட்டதற்கும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். அதேபோன்று தெலுங்கானா, ஆந்திராவில் நடத்தப்பட்ட சோதனைகளுக்கும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ட்விட்டர் X தளத்தில் தன்னுடைய  கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார்.