உலக மயக்கவியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மயக்கவியல் துறை என்பது அறுவை சிகிச்சையில் இன்றியமையாத ஒன்று. இந்த துறை மட்டும் இல்லாமல் இருந்தால் அறுவை சிகிச்சை என்பது வலி நிறைந்த ஒன்றாக இருந்திருக்கும் . சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யும்போது மக்களுக்கு எந்தவித மயக்க மருந்து கொடுக்கப்படாது.

அதன் காரணத்தினாலேயே இதை அறுவை சிகிச்சைகள் சிசேரியன் வகை சிகிச்சைகள், மூளை நரம்பியல் சார்ந்த அறுவை சிகிச்சைகள் போன்ற நுண்ணிய சிகிச்சைகள் அந்த காலத்தில் செய்யப்படவில்லை. முதன்முதலில் அமெரிக்க பல் மருத்துவரான மார்ட்டின் என்பவர் கடந்த 1846-ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி மாஷா சேட் ஜென்ரல் மருத்துவமனையில் எட்வர்ட் கில்வர்ட் என்ற நோயாளியின் கழுத்தில் இருந்த ரத்தக்கட்டியை அகற்றுவதற்காக ஈதர் என்ற மயக்க மருந்தை பயன்படுத்தியுள்ளார்.

அவர் நோயாளியை மயக்க நிலைக்கு உட்படுத்தி அறுவை சிகிச்சையை வலியில்லாமல் செய்து காட்டி அசத்தினார். அன்றிலிருந்து இன்று வரை அக்டோபர் 16-ஆம் தேதி உலக மயக்கவியல் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உடலில் எந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றாலும் மயக்கவியல் துறையின் துணை இல்லாமல் அதனை நிகழ்த்துவது சாத்தியமில்லை.