உலக மயக்கவியல் தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. மயக்கவியல் துறை என்பது அறுவை சிகிச்சையில் இன்றியமையாத ஒன்று. இந்த துறை மட்டும் இல்லாமல் இருந்தால் அறுவை சிகிச்சை என்பது வலி நிறைந்த ஒன்றாக இருந்திருக்கும் . சில நூற்றாண்டுகளுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யும்போது மக்களுக்கு எந்தவித மயக்க மருந்து கொடுக்கப்படாது.

அதன் காரணத்தினாலேயே இதை அறுவை சிகிச்சைகள் சிசேரியன் வகை சிகிச்சைகள், மூளை நரம்பியல் சார்ந்த அறுவை சிகிச்சைகள் போன்ற நுண்ணிய சிகிச்சைகள் அந்த காலத்தில் செய்யப்படவில்லை. பொதுவாக மூன்று விதமாக மயக்க மருந்துகள் அறுவை சிகிச்சை என்பது உபயோகப்படுத்தப்படுகிறது. முதலில் General Anaesthesia உடல் முழுக்க மயக்க நிலைக்கு உள்ளாக்கும்.

மூளை சார்ந்த அறுவை சிகிச்சைகள், இதய சிகிச்சைகள் போன்றவற்றிற்கு இது உபயோகப்படுத்தப்படும். Major Anaesthesia உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் உணர்ச்சி ஏற்றதாக மாற்றுவதாகும். கை,கால் அறுவை சிகிச்சைகள் இடுப்புக்கு கீழான அறுவை சிகிச்சைகள், ஒரு பாகத்தில் மட்டும் சிகிச்சை தரவேண்டும் என்றால் இந்த வகையில் அறுவை சிகிச்சை செய்யப்படும். Local anaesthesia உடலின் ஒரு இடத்தை மட்டும் மயக்க நிலைக்கு கொண்டு செல்ல இது பயன்படுகிறது. ஒரு விரலாகவோ, பற்களாகவோ, கண்களாகவோ வேறு ஏதேனும் உடலின் ஒரு சிறிய ஒரு பாகமாகவோ இருக்கலாம்.